Friday 18 January 2013

வரவு குறைவு செலவு அதிகம்


வரவு  குறைவு  செலவு அதிகம் 
இருப்பு குறைவு. விரயம் அதிகம்.இது தான்  நமது மின் செலவீட்டு நிலை.
உற்பத்தி, உடல் நலம், வசதி. உல்லாசம், பொழுதுபோக்கு இப்படி எல்லாவற்றிற்கும் மின்சாரத்தைச் சார்ந்து வாழ மனிதன் பழகிவிட்டான். அடுத்து பெட்ரோல். மின்சாரமாயினும் பெட்ரோல். ஆயினும் அவற்றின் இருப்பிற்கு அதாவது அவற்றின் மூலாதாரத்திற்கு ஓர் எல்லை உண்டு. அதைத் தாண்டும் போது பற்றாக்குறை வருகிறது. பஞ்ச ம் வருகிறது. இதற்கிடையே இலவசங்களுக்குப் பழகி மின்சாரமும் இலவசமாக வேண்டும்  என்ற கோரிக்கை ஒருபுறம் வலுக்கிறது. மாற்று சக்தி என்னவென்று தே டும் நிலை வருகிறது.
கடைசியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யக் கற்று க்கொண்டிருக்கிறோம் றிருக்கிறோம்.
எந்த அளவுக்கு இது பயனுள்ளது?
கடந்த2011மே  மாதம் 25ம் தேதி ஒரே  ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் செலவான மின்சார அளவு227.295 மில்லியன் யூனிட்டுகள். இதற்குக் காற்றாலை மூலம் கிடைத்திருக்கிற மின்சாரரம்75.002 மில்லியன் யூனிட்டுகள். அதாவது நம் மின் உபயோகத்திற்கு காற்றாலையின் நன்கொடை 31 முதல்3 4 சதவீதம்.
எவ்வளவோ  காற்று வீச்சுகள் பயன்படுத்தப் படாமலேயே  நாட்டைக் கடந்து செல்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் இப்படி மின்சாரத் தட்டுப்பாட்டால் பரிதவிக்க வேண்டி வராது. இப்படிச் சொல்கிறார்    இந்திய காற்று சக்திச் சங்கத்தின் சேர்மன் ஆன  கஸ்தூரி ரங்கையன் 
வீச விருக்கிற காற்று சீஸன் அக்டோபர் முதல் வாரம் வரை நீடிக்குமென்கிறார். காற்றின் மூலம் மின்சார பெற ஆங்காங்கே  முயன்றால்  அந்தந்த அளவு தன்னிறைவு பெறலாம். முயற்சிகள் நடக்க வே ண்டும்
அடுத்து மழை. 
அது இந்த முறை தவறி இருக்கலாம். ஆனால் எப்போதுமே தவறி விடாது. 
மழை நீர் சேமிப்பு நல்ல திட்டம். கூடவே கவனத்தில் கொள்ள வேண்டியது  மழை வீழ்ச்சி ஆற்றல். அது ஒரு பெரிய சக்தி. அதன் வேகம் என்னவென்று புரிந்துகொள்ள  கடலூர் ஓர் உதாரணம் 
அதுபோல்  பல . 
சூரியசக்தியைப் பயன் படுத்துவது போல் மழைப் பொழிவின் சக்தியைப் பயன் படுத்தும் வழி எங்காவது நடக்கலாம். அதுவும் சேர்ந்தால்
 ஆற்றல் பஞ்சம் வராது . எல்லாவற்றிலும் சிறந்தது பழைய பஞ்சாங்கம்.
குறைவாகச் செலவழித்தால் எதுவும் நிறைய நாள் வரும்